Ticker

6/recent/ticker-posts

மணிக்கொடி பி.எஸ். ராமையாவின் எழுத்தும் பணியும்

 

மணிக்கொடி பி.எஸ். ராமையாவின் எழுத்தும் பணியும்

    சிறுகதை வரலாற்றில் முக்கிய இடம் பெறுபவர் பி.எஸ். ராமையா அவர்கள். இவரில்லாவிடில்மணிக்கொடிதோன்றியிருக்க முடியாதென்பதையும்ää அது நன்கு நடந்திருக்க முடியாததென்பதையும் மணிக்கொடி இதழ் வழி தெரிந்த ஒன்று. சிறுகதையின் வளர்ச்சிக்கு நிறுவன முறையில் இவர் ஆற்றிய சேவையளவு சிறப்பினைச் சிறுகதை இலக்கியத்திற்கு இவர் எழுதிய சிறுகதைகள் அளிக்கவில்லை என்பது உண்மையே.

                மணிக்கொடிக் காலம் தொட்;டு இன்று வரை ஆக்க இலக்கியம் படைத்து வரும் இவரது சிறுகதைகள் ஆரம்ப காலத்திலேயே சிறந்து விளங்கின. 1947 க்குப் பின்னர் இவர் தலைசிறந்த நாடகாசிரியராகப் பரிணமித்துள்ளார்.

                மத்தியதர வர்க்கத்தினரது வாழ்க்கையினடியாகத் தோன்றும் உணர்ச்சிக் கட்டங்களைச் சித்திரிப்பதில் இவர் சிறந்து விளங்கினார். ‘அடிச்சாரைச் சொல்லியழுஇவரது சிறந்த சிறுகதைகளில் ஒன்று.

                குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தைத் தமது கதைகள் எல்லாவற்றிலும் நடமாடவிடும் எழுத்தாளர்களுள்ää முக்கியமானவர் இவர். குங்குமப்பொட்டுக் குமாரசுவாமி என்னும் பாத்திரம் இவர் கதைகள் பலவற்றிலும் இடம் பெறும். தேவன்ää தான் எழுதிய கதைகளில் மல்லாரிராவ் என்னும் ஒரு பாத்திரத்தினைச் சித்திரிப்பார். தேவனது மல்லாரிராவிலும் பார்க்கää இராமையா அவர்களது குங்குமப்பொட்டுக் குமாரசுவாமிக்கு நிலையான இடம் உண்டு.

                விடுதலைப் போராட்டகாலத்தில் சிறந்து விளங்கிய மணிக்கொடி என்ற இதழின் ஆசிரியராக 1935 -ல் பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து இவ்விதழ் சிறுகதை இதழாக உருமாற்றம் பெற்றுவிட்டது. தினமணிக்கதிர் வாரப் பதிப்பிலும்ää பல சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது கதைகளில் பரந்த உளவியல் அனுபவம்ஈ ஆழ்ந்த பார்வைää இன்ப துன்பங்களை உள்ளவாறு உணரும் உணர்வு முதலியன நிறைந்து காணப்படுகிறது.

எழுத்துப் பணி

                ராமையாவின் இந்த நாட்கள் மிகவும் சிரமமான காலம் 1930 லிருந்தே அவருக்கு ஆர். பார்த்தசாரதி (பரதன்) யோடு பழக்கம் ஏற்பட்டது. அப்போது கும்பகோணத்தில் மகாமகம் கண்காட்சி சிறப்பாக நடந்தது. அதில் பார்த்தசாரதி வைத்திருந்த கதர் ஸ்டாலில் கதர் விற்பனை செய்ய ராமையா கும்பகோணம் சென்றார். அதுக்குப் போகுமுன் தான் ராமையாவின் இலக்கிய வாழ்க்கைக்கு அடிகோலும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

                சுதந்திர இயக்கத்தில் ஈடுபட்ட ராமையாவுக்கு சங்கு சுப்பிரமண்யன்ää வெ. சந்தானம் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டிருந்தது. மகாமகத்துக்குப் போகுமுன் சங்கு சுப்பிரமண்யன் ராமையாவிடம்ஆனந்த விகடன்சிறுகதைப் போட்டி வைத்திருப்பதை தெரிவித்து அதுக்கு ஒரு கதை எழுதும்படி தூண்டினார். என்னவோ எழுதத் தோன்றியது. ராமையா ஒரே மூச்சில் ஒரு கதை எழுதி அனுப்பி விட்டார். அதுதான்மலரும் மணமும்கதையை எழுதியவர் பெயர் கூட எழுதவில்லை.

                அந்த கதை ஆனந்த விகடன் பத்திரிகையில் பிரசரிக்கப்பட்டு பத்து ரூபாய் சன்மானம் கொண்டு வந்தது. இந்த கதைதான் அன்று எங்கும் சிறப்பாகப் பேசப்பட்டது. கதையை வெளியிடுமுன்ஆசிரியர் பெயரைத் தெரிவிக்கவும்என்று விகடன் எழுதியிருந்தது. பிறகு கதை எழுதியது தான் என்று விகடனுக்கு அறிவித்து ராமையாவுக்கு அந்த சன்மானத்தை பெற்றுக்கொண்டு வந்தார்.

                ராமையாவே சொல்லி இருப்பது போல் அப்போது அவருக்கு சிறுகதை துணுக்க விஷயங்கள் எதுவும் தெரியாது. ஏதோ கதை எழுத வேண்டும் என்ற நினைப்புதான் இருந்தது. இந்த சிறுகதை மூலம் ஒரு கதாசிரியராக மலர்ந்த ராமையாää அப்போது நடந்து வந்தஜயபாரதிபத்திரிகையில் உதவி ஆசிரியராக வேலை பார்த்தார். ஒரு மூன்று மாத காலம்ää இருபது ரூபாய் சம்பளத்தில்.

                மே மாதத்தில்மலரும் மணமும்வெளியான பிறகு ராமையா தொடர்ந்து கதைகள் எழுத ஆரம்பித்தார். ஆனந்த விகடன் பத்திரிகையில்வாக்குரிமை’ää‘கூப்பாடிட்டான் கோவில்என்ற கதைகளையும்ää‘கடைசித் தலைமுறை’ää‘மாஜிக்கணவர்என்ற கதைகளை டி.எஸ். சொக்கலிங்கம் நடத்திய காந்தி மாதம் இருமுறை பத்திரிகையிலும் எழுதினார். ஜயபாரதியிலும்வசந்திக்காவாவதுஎன்ற கதையை எழுதினார். ‘நட்சத்திரக் குழந்தைகள்கதையை எழுதி ஆனந்த விகடனுக்கு அனுப்பி இருந்தார்.

                இந்த சமயத்தில் தான் 1933 செப்டம்பரில் வாராää கே. சீனிவாசன்ää டி.எஸ். சொக்கலிங்கம் மூவரும் சேர்ந்த ஆரம்பித்தமணிக்கொடிவாரப் பத்திரிகை வெளிவந்தது. முதல் இதழை படித்ததுமே அதன் தொணி ராமையாவை கவர்ந்து விட்டது. உடனே அவர் மணிக்கொடி ஆபீசுக்குச் சென்று அவர்களை சந்தித்தார். சீனிவாசன் எழுத்து குறிப்பாக அவரை கவர்ந்தது. மணிக்கொடி மூன்றாவது இதழில் மூர்மார்க்கட் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். ராமையாவிடம் ஒரு திறமை இருப்பதை கண்டுவிட்ட கே. சீனிவாசன் ராமையாவை மணிக்கொடி ஆபீசில் சேர்த்துக் கொண்டார். அது முதல் மணிக்கொடிக்கும் ராமையாவுக்கும் உள்ள தொடர்பு ஆரம்பித்தது.

                அப்போது ஆனந்த விகடனுக்கு அனுப்பியநட்சத்திரக் குழந்தைகள்மூன்று மாதங்கள் கழித்து திரும்பி வரவே சங்கு சுப்பிரமணியன் மூலம் அதுகலைமகள்பத்திரிகைக்கு அனுப்பப்பட்டு அதில் வெளிவந்தது. ‘மலரும் மணமும்கதையால் அறிமுகமான ராமையாவைநட்சத்திரக் குழந்தைகள்கதை பிரபலமாக்கியது.

                மணிக்கொடி தமிழ் இலக்கிய உலகில் ஒரு புதிய குரலை எழுப்பி வந்து கொண்டிருந்தது. ராமையா அதில் எழுதிக்கொண்டு வந்தார். மணிக்கொடி நிறுவனங்களில் முதல்வாரன கே. சீனிவாசன் பம்பாய்க்கு இங்கிலீஷ் பத்திரிகை தொடர்புகொள்ளப் போய்விட்டார். ராமையா .ரா. க்கு உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

                இந்த சமயத்தில் தினமணி ஆரம்பிக்கப்பட்டு விட்டதால் சொக்கலிங்கம் அதன் ஆசிரியராக பதவி ஏற்றுக் கொண்டுவிட்டார். .ரா. வும் ராமையாவும் மணிக்கொடியை நடத்தி வந்தார்கள். 1934 அக்டோபரில் .ரா.வுக்கும் மணிக்கொடிக்கும் உள்ள தொடர்பு நீங்கிவிட்டது. .ரா. போனபிறகு நாலைந்து மாதம் மணிக்கொடி நடந்து வந்தது. அதுக்கு மேல் நடத்த முடியாமல் 1935 பிப்ரவரியில் மணிக்கொடியை கே. சீனிவாசன் நிறுத்த முடிவு செய்துவிட்டார். இந்த காலத்தில் ஒரு நல்ல எழுத்தாளராக ஆகிவிட்ட ராமையாவுக்கு மணிக்கொடி நிற்பது மனத்துக்கு நிம்மதி தரவில்லை.

திரைப்படத்துறை

                மணிக்கொடியிலிருந்து விலக்கப்பட்டவுடன் பி.எஸ். ராமையா திரைப்பட இயக்குநர் முருகதாசா மூலம் திரைப்படத் துறைக்கு வந்தார். மணிக்கொடியிலிருந்து வெளியேறிய பிறகு பத்திரிகையில் சேரவோ அல்லது சுயேச்சை எழுத்தாளராக எழுதிக் கொண்டிருக்கவோää விரும்பாமல்ää திரைப்படத்துறை தனது எதிர்கால வாழ்வுக்கு வழி வகுக்கும் என்ற நம்பிக்கையில் ராமையா சேர்ந்தார் என்று சி.சு. செல்லப்பா கூறுகிறார்.

                பூலோக ரம்பைஎன்ற படத்துக்கு வசனம் எழுதியதுதான் முதல்பணி. பின்னர்மணிமேகலை’ää‘மதன காமராஜன்’ää‘பக்த நாரதர்’ää‘குபேர குசேல’ää‘பரஞ்சோதி’ää‘அர்த்தநாரி’‘தன அமராவதி’ää‘விசித்திர வனிதாமுதலிய திரைப்படங்களில் வசனம் திரைக்கதைää படம் ஒழுங்கு செய்தல்ää இயக்குவதில் கூட்டுப்பொறுப்பு என்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். பி.எஸ். ராமையா எழுதிய சில நாடகங்கள் திரைப்படங்களாக ஆக்கப்பட்டன.

                1943 இல்சினிமாஎன்ற நூலும் எழுதினார். இது திரைப்படம் பற்றிய மிகச் சிறந்தஉத்தி நூல்என்று இன்றளவும் போற்றப்படுகிறது. 1949 வரை இவ்வாறு திரைப்படத் துறையில் பணியாற்றிய ராமையாää அதன்பிறகுää“சினிமாவுக்கு இனிமேல் எழுதுவதில்லைஎன்று தீர்மானித்தவராக அத்துறையிலிருந்து வெளியேறினார். எனினும் 1950 இல் எஸ்.எஸ். வாசன் மூலமாக மறுபடியும் திரைப்படத் துறை வாய்ப்பு அமைந்தது.

                ஆன்என்னும் இந்தி திரைப்படத்தைத் தமிழில்டப்செய்யும் பொறுப்பை பி.எஸ். ராமையா ஏற்றுக் கொண்டார். இதற்காகää பம்பாய் சென்று அங்கிருந்து இங்கிலாந்துக்கும் சென்று வந்;தார். இதைத் தொடர்ந்து திரைப்படத் துறையில் சில வாய்ப்புகள் தேடி வந்தன@ ஆனால் ராமையா தீவிரம் காட்டவில்லை. திரைப்படத் துறையின் உள்ளே நுழைந்த பிறகுää அந்தத் துறையின் சுவையும் தரமும் வேறுபட்டவை என்றும் தனக்குப் பொருந்தாதவை என்றும் ராமையா உணர்ந்தார். மணிக்கொடி காலத்தில் தான் ஆற்றிய எழுத்துப் பணிக்கும் சினிமாத் துறைப் பணிக்கும் இடையில் காணப்பட்ட சுவைவேறுபாட்டை பி.எஸ். ராமையா பின்வருமாறு சுவைபட வருணித்தார்.

                ஒரு பாதம் அல்வாää நான்கு வறுத்த முந்திரிப் பருப்புää ஒரு கப் காபி. அருந்தித் திருப்தி அடையும் விருந்தாளிக்கும்ää இலை நிறைய புளியஞ்சாதம்ää சர்க்கரைப் பொங்கல்ää தயிர்சாதம் சாப்பிட்டுத் திருப்தி அடையும் விருந்தாளிக்கும் உள்ள வித்தியாசம் தான் மணிக்கொடிப் பணிக்கும் சினிமாத் துறைப் பணிக்கும் உள்ள வித்தியாசம்எனினும் பிழைப்புக்கு முழுவதும் எழுத்தையே நம்பியிருந்த தனக்கு சினிமா பெரிய அளவில் ஆதரவு அளித்துக் காப்பாற்றியது என்பதையும் பி.எஸ். ராமையா மறந்து விடாமல் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

நாடகத் துறை

                நாடகக் கலைஞர் எஸ்.வி. சகஸ்ர நாமத்தின் மூத்த சகோதரியின் மகன் என்.வி. ராஜாமணியின் மூலம் பி.எஸ். ராமையா நாடகத் துறைக்கு வந்தார். எஸ்.வி. சகஸ்ர நாமத்தின் சேவாஸ்டேஜ் நாடகக் குழுவுக்காக ராமையா 1956 ஆம் ஆண்டு முதல் 1970 வரை பல நாடகங்கள் எழுதிக் கொடுத்தார்.

                இலக்கிய வடிவங்களில் சிறுகதைää நாவல் ஆகியவற்றை விடää அதிக அழகுக்கு இடம் கொடுக்கும் வடிவம் நாடக வடிவம் என உணர்ந்தார். இவர்பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்தொடங்கிää‘தேரோட்டி மகன்வரை பல நாடகங்களை எழுதினார். நாடகப் படைப்புகள் அவருக்கு நிறைவு தருவனவாகவும் வெற்றியளிப்பனவாகவும் அமைந்தன. “பி.எஸ். ராமையா நாடகத் துறையில் இறங்கினார். அதிலும் கணிசமான வெற்றி கண்டார்என்று மணிக்கொடி நிறுவுநர் கே. சீனிவாசன் பாராட்டுகிறார்.

நாவல் துறை

                பி.எஸ். ராமையாவைத் தமிழ் இலக்கிய உலகம் சிறுகதையாசிரியர்ää நாடக ஆசிரியர் என்று அறிந்து கொண்டிருக்கிற அளவுக்கு அவர் நாவலாசிரியர் என்று அறிந்து கொள்ளவில்லை. ஏற்றுக் கொள்ளவும் இல்லை. ராமையாவின்ää சிறுகதைகள் என்ற பெரு வெள்ளத்தில்நாவல் துறைஅமுங்கிப் போய் விட்டதாகவே கருதலாம். நாவல் எழுதும் முயற்சி மிகவும் அறிய முயற்சி என்றும்ää அதற்குறிய பின்தளம் பற்றி மிக விரிவாக நாவலாசிரியர் அனுபவப்பட்டிருக்க வேண்டும் என்றும்ää அப்படி இருந்தால்தான் நாவல் படைப்பு சாத்தியம் ஆகும் என்றும் பி.எஸ். ராமையா கருத்துக் கொண்டிருந்தார். தான் ஒரு முழுமையான நாவல் ஆசிரியர் அல்ல என்றே அவர் எண்ணினார். தனது சிறுகதைகள் - அவை பிறந்த விதம் பற்றி விவாதித்த அளவுக்கு தனது நாவல்கள் பற்றி விவாதிக்கவில்லை. “நானும் சில நாவல்கள் எழுதிப் பார்த்திருக்கிறேன்என்று ஒரு பேட்டியில் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார். அவர் எழுதிய நாவல்கள்பிரேம ஹாரம்’ää‘தினை விதைத்தவன்’ää‘நந்தா விளக்கு’ää‘சந்தைப் பேட்டைஎன்பன ஆகும். இதன் பிரதிகள் கிடைக்காதவையாகவே உள்ளன. ‘நந்தா விளக்குஎன்னும் நாவல் மட்டும் புத்தகமாக கிடைக்கப் பெறுகிறது.

நிறைவுரை

மணிவிழாவிற்குப் பிறகுää பதினெட்டு ஆண்டுகள் வாழ்ந்திருந்த பி.எஸ். ராமையா தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டு சென்னையில் 18.05.1983 இல் காலமானார். வத்தலக்குண்டு மஞ்சல் ஆற்றில் யானைக் கல்லின் மேலேயிருந்து குதித்துக் விளையாடித் தொடங்கிய வாழ்க்கை ஆட்டம்ää அல்லது ஓட்டம் எழுபத்து எட்டாம் வயதில் நிறைவுபெற்றது. மணிவிழாவுக்குப் பின்னரும்ää மரணத்துக்கு முன்னரும் நிகழ்ந்த மிக முக்கியமான நிகழ்ச்சிகள் பி.எஸ். ராமையா எழுதி முடித்தமணிக்கொடி காலம்வெளியிடப்பட்டதும்ää அந்த நூலுக்கு 1982 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது கிடைத்ததும் ஆகும். ‘மணிக்கொடி காலம்என்னும் நூல் ஏறத்தாழ பி.எஸ். ராமையாவின் வரலாறும் ஆகும் என்று வெங்கட்சாமிநாதன் மிகப் பொருத்தமாகவே சுட்டிக்காட்டுகின்றனர்.

பி.எஸ். ராமையா காலமான பிறகு ஒரு பத்திரிகையில் அஞ்சலிக் குறிப்பு எழுதிய திருப்பூர் கிருஷ்ணன்ää“எழுத்துலக மெய்ஞானியாக விளங்கிய பி.எஸ். ராமையா ஏதோ மனச் சங்கடத்தில் இவ்வாறு கூறுவதாகத்தான் நினைத்தோம். இவ்வளவு குரூரமான அர்த்தம் அந்த வார்த்தைகளுக்கு இருந்தது என்பது பின்னால்தான் புரிந்ததுஎன்று வேதனைப்பட்டிருந்தார். ஒரு துறை இல்லாவிட்டால் இன்னொரு துறை என்று தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தார் பி.எஸ். ராமையா என்பது அவருடைய வாழ்க்கையின் சிறப்பான அம்சம்.

                ராமையாவின் சொந்த ஊரான வத்தலக்குண்டு கிராமத்துப் பக்கம் போகிறவர்கள் ராமையா வாழ்ந்த வீட்டுப் பக்கம் போக வேண்டும்@ அங்கேஇது ராமையா வசித்த இல்லம்என்று ஒரு கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். பதித்து வைத்தவர் அவருடைய நண்பர் அமரர் சி.சு. செல்லப்பா. கல்வெட்டு ஒன்று@ கசியும் நினைவுகள் இரண்டு.

 

பயன்பட்ட நூல்கள்

1. பி.எஸ். ராமையாää மணிக்கொடி காலம்

2. சி.சு.செல்லப்பாää பி.எஸ். ராமையாவின் சிறுகதைப் பாணி

3. மு.. தமிழ் இலக்கிய வரலாறு

கருத்துரையிடுக

0 கருத்துகள்