Ticker

6/recent/ticker-posts

கிருட்டிணகிரி மாவட்டநாட்டுப்புற மருத்துவம் – அறிமுகம்

 

கிருஷ்ணகிரிமாவட்டநாட்டுப்புறமருத்துவம்அறிமுகம்

 

     வளர்ந்து வரும் நாடுகளில் பல்வேறான மருத்துவ முறைகளும், ஆய்வுகளும் நடந்துகொண்டிருக்கின்றன.அமெரிக்கா சீனா ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளில் பெரும்பாலும் மருத்துவம் சார்ந்த ஆய்வுகளும், மருந்து பொருட்களையும் கண்டுபிடித்து நம் நாட்டிற்கு உதவி செய்கின்றனர் இருந்தபோதிலும் அவர்களின் மருத்துவ முறைகளை அவர்கள் என்றும் மறப்பதில்லை. அதே போன்றுதான் நம் நாட்டில் வாழும் மக்களுக்கு  என்னதான் தற்போதைய காலகட்டத்தில் பல்வேறுவிதமான மருந்துகளும் மாத்திரைகளும், கண்டுபிடித்தாலும், நம் நாட்டுப்புற மற்றும் சித்த வைத்தியத்தை நம் மக்கள்  என்றும் மறந்து விடுவதில்லை. நாட்டுப்புற மருந்தை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் இவ் ஆய்வுகள் ஆராயப்படுகிறது.

 



நெடுங்கல்ஊர்:-

       கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கவேரிப்பட்டிணம் ஊராட்சியில் அமைத்துள்ளது நெடுங்கல் என்னும் ஊராகும். “நெடுங்கல்(என்பதற்குப் பொருள் ) நீண்ட+கல்= நெடுங்கல்1. என்பது பொருளாகும்”, நீண்ட என்பதற்கு உயரமான செங்குத்தான வடிவிலான கல். கல்லின் காரணப்பெயரை ஒட்டி நெடுங்கல் என்றழைக்கப்படுகிறது.

       பழங்காலத்தில் மக்கள் ஆடு, மாடுகள்மேய்க்கும் பொழுது அவைகள் காணாமல் போகும் பட்சத்தில் அவைகள் எங்குள்ளன என்பதைக் காண்பதற்கு நெடுங்கல்லை பயன்படுத்தினர். இதற்குச் சான்று நெடுங்கல் ஊரில் உயரமான கல் ஒன்று காணப்படுகிறது.

       பழங்காலத்தில் போர்வீரர்கள் பகைவர்கள் ஒளிந்திருப்பதைக் கண்டறிய இந்த வகை கல் பயன்படுகின்றன, நாட்டுப்புறங்களில் உள்ள உயரமான கல், மரம், குன்று, மலைகளில் ஏறி மறவர்கள் எதிர் நாட்டு வீரர்கள் வருவதைஅறிந்து அச்செய்தியை ஒற்றர்கள் மூலமாக அரசர்களுக்குத் தெரிவித்தனர்2.

நாட்டுப்புறமருத்துவம் :-

        நெடுங்கல் வட்டாரத்தில் பரம்பரை பரம்பரையாக நாட்டுப்புற மக்கள் பயன்படுத்தும் முறையே நாட்டுப்புற மருத்துவ முறைஎன்றழைக்கப்படுகிறது.

                பொதுவாக நாட்டுப்புற மக்கள் பயன்படுத்தும் மருத்துவ வகைகள், இலை, வேர், காய், கனி, தண்டு, நுனி, பட்டை, கொட்டை(விதை) ஆகியவற்றின் மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் மருத்துவ முறை.இதுவே நாட்டுப்புற மருந்து தயாரிப்பதற்குப் பயன்படும் மூலப்பொருளாகும்.

நாட்டுப்புறமருத்துவவகைகள்:-

Ø  நாட்டுப்புற மருத்துவம். (Folk medicine)

Ø  இயற்கை மருத்துவம்.   (Nfureoplathy)

Ø  பாட்டி வைத்தியம்.  (Folk medicine)

Ø  மூலிகை மருத்துவம்.  (Herbal medicine)

Ø  நம்பிக்கை மருத்துவம்.

Ø  சமயம் சார்ந்த மருத்துவம்.

Ø  கை வைத்தியம்.

Ø  தோடு மருத்துவம்

Ø  வர்ம மருத்துவம்

என்று பலவாறு அழைக்கின்றனர்.

 

நெடுங்கல் வட்டாரத்தில் சித்த மருத்துவம், பாட்டி வைத்தியம். போன்றவை அதிகமாகக் காணப்படுகின்றது. நெடுங்கல் வட்டார மக்கள் கூறுவது என்னவென்றால்ஊரைச்சுற்றி மலைப்பகுதிகள் அதிகமாகக் காணப்படுவதால்.மூலிகைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இதனால் எந்தநோயும், ஏற்படாமல், பக்கவிளைவுகள் இல்லாமலும் நெடுங்கல் வட்டார மக்கள் உடல் ஆரோக்கியத்துடன் காணப்படுகின்றனர். நகர மக்களையும், நாட்டுப்புற மக்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நாட்டுப்புற மக்களே உடல் ஆரோக்கியத்தில் முதலிடம் பெறுகின்றனர். நகர மக்களுக்குச் சர்கரை, இருதய நோய், புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய்கள் உள்ளன.

நாட்டுப்புமருத்துவத்திற்கும் அல்லோபதி மருத்துவத்திற்கும் உள்ள வேறுபாடு

 

நாட்டுப்புமருத்துவம்

அல்லோபதிமருத்துவம்

1.        இயற்கையானது

Nature

பக்கவிளைவுகள்அற்றது

( No Side Effect )

 

2.        எளிமையானது

 

3.        ஆபத்தில்லாதது

 

4.        எளிதில்கிடைக்கக்கூடியது

 

5.        பொருள்செலவற்றது

 

6.        பரம்பரைபரம்பரையாகவருவது (Tradditional medicine)

 

7.        தாய் தந்தை அற்றது

 

8.        கஷாயம், லேகியம், போடி, உருண்டை, சூரணம் வடிவிலானது

 

9.        இது பரிசோதனை அற்றது

செயர்கையானது

 (Proudelef)

பக்கவிளைவுஉள்ளது

(Side Effect )

 

கடுமையானது

 

ஆபத்தானது.

எளிதில்கிடைக்காது.

செலவுடையது,

 

பரம்பரைஇல்லாதது

 

 

தாய் தந்தை உண்டு.

 

மாத்திரை, டானிக், ஊசி வடிவிலானது

 

 

 

பரிசோதனைக்கு உட்பட்டது.

 

நோய்கண்டறியும்முறை:-

 

நெடுங்கல் வட்டாரத்தில் நோய் கண்டறியும் முறைகள்.

 

1.        கண்களைப் பார்த்து நோய்களைக் கண்டறிதல்.

2.        நாடி பிடித்து நோய்களை கண்டறிதல்.

3.        கை ரேகை வைத்தியம்

 

1.கண்களைப் பார்த்து நோய்களை கண்டறிதல்:-

                அகத்தின் கண் முகத்தில் தெரியும்

உடம்பில் உள்ள அழகு நோய் கண்டுபிடிக்கும் கருவி கண்கள் ஆகும். சான்றாக மஞ்சள் காமாலை இருபப்வர்களை கண்களை பார்த்து கண்டறியலாம். கண் விழித்திரை மஞ்சளாகக் காணப்படும்.  இந்த அறிகுறி மஞ்சள் காமாலையைக் குறிக்கும்.

2. நாடி பிடித்து நோய்களைக் கண்டறிதல்:-

நொடிக்கு 72 முறை நாடி துடிக்கும். இந்த நாடி துடிப்பு குறைந்தாலோ மிகுந்தாலோ நோய் இருப்பதைக் கண்டறியலாம். நகரங்களுக்கும் நோய்களுக்கும் தொடர்புண்டு 10 விரல்நகங்கள் நரம்பு மண்டலங்களுக்குத் தொடர்பு உண்டு. உடலில் எந்த பக்கத்திற்கு நோய் உள்ளது என்பது நரம்பு  வழியாகச் சென்று நகங்களில் காட்டியுள்ளது. பெருவிரல் நகம் பழுது, சொத்தையால் இருதய நோய் மராடைப்பு ஏற்படலாம். கடைசி விரலுக்கும் கல்லீரலு தொடர்புண்டு

·         கருப்பாக மலம் கழித்தால் அவன் இறந்து விட்டான் என்று பொருள்.

·         சிறுநீரை எறும்புகள் மொய்த்தால் அவனுக்குச் சர்க்கரை வியாதி உள்ளது எனத் தெரிந்து கொள்ளலாம்.

நாட்டுப்புறமருத்துவர்களின்பெயர்கள்

கிருஷ்ணகிரி மாவட்ட நெடுங்கல் ஊரில் நாட்டுப்புற மருத்துவத்தைப் பல்வேறு பெயர்களில் பெயரிட்டு அழைக்கின்றனர்.

 

வைத்தியர்

       பெண்ணாக இருந்தால் மருத்துவச்சி. பழங்காலத்தில் மருத்துவச்சி முதல் வைத்தியர் வரை மகப்பேறு காலத்தில் பெரிதும் உதவியாக இருப்பவர்கள் விளக்கு எண்ணெய் கொடுத்து எளிய முறையில் குழந்தைப் பேற்றினைச் செய்வார்கள். தற்காலத்தில் பெண்கள் மகற்பேறு என்றாலே பயந்து நடுங்குகின்றனர் இதற்குக் காரணம் குழந்தைப் பேறு அறுவைசிகிச்சையே காரணமாகும்.

 

பச்சிலை வைத்தியர்

        பச்சிலையை  அப்படியே பறித்து கையில் நுனிக்கி பல் வலிகளுக்கு வேலுசாமி வைத்தியர் தருவார் “பல்வலிவந்தால் வேப்பங் கொழுந்து, கடுக்காய்தூள் சிறிது மிளகு கொடுப்பேன்” என்று கள ஆய்வில் கூறினார்2.

வயிற்று வலி

       வயிற்று வலி வந்தால் வெற்றிலை சீரகம் ஓமம்கொடுத்து அப்படியே நிறுத்துவேன்3.

3.வேலுசாமி நெடுங்கல் நேர்காணல் நாள் 20.02.2014.

 

பாட்டிவைத்தியம்:-

        நெடுங்கல் வட்டாரத்தில் ஒவ்வொறு வீட்டிலும் பாட்டி வைத்தியம் காணப்படுகிறது. அஞ்சரைப் பெட்டி என்னும் பெட்டியில் மிளகு, பூண்டு, சீரகம், ஓமம், இஞ்சி, சுக்கு, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு, கடுக்காய்,தான்றிக்காய், நெல்லிக்காய், வலம்புரி, இடம்புரி, காசுக்கட்டி, கோரோசனை, ஆகிய பொருள்கள் வைத்துள்ளனர். வீட்டில் யாருக்காவது வயிற்று வலி, இடுப்பு வலி, சளி, இருமல், ஜீரண கோளறு, பல்வலி ஏற்பட்டால் உடனே அஞ்சரைப் பெட்டியில் உள்ள மருத்துவப் பொருட்களைக் கொண்டு மருந்து தயாரித்து கொடுக்கின்றனர். நெடுங்கல் வட்டாரத்தில் முனியம்மாள் என்னும் தொன்னூறு வயது கிளவி பரம்பரை பரம்பரையாக நாய்கடி, வண்டுகடி, தேள்கடி, பாம்புக்கடி, வயிற்று வலி, பல்வலி, குழந்தை பிரசவம் போன்ற எல்லா மருத்துவம் நானே செய்யறேன்4, என்று கள ஆய்வில் தெரிவித்தார். வயது தொன்னூறு இருப்பினும் இந்த ஊரில் இந்தத் பாட்டிதான் மருத்துவர்.

 

கைராசிமருத்துவர்:-

       மருத்துவத்தில் கைராசி மருத்துவம் என்று காணப்படுகிறது.நல்ல கை குணம் உள்ளவர்கள் மண் கரைத்து கொடுத்தாலும் நோய் குணமாகிறது. அதே அலோபதி மருத்துவத்திலும் இந்த நம்பிக்கை காணப்படுகிறது. பனிரெண்டாம் வகுப்பில் மருத்துவத்தில் மதிப்பெண் பட்டியலில் மதிப்பெண் இருந்தாலும் மருதுவப்படிப்பில் மாணவர்களைச் சேர்பதில்லை இதற்குக் காரனம் வாசன்கூறுகிறார்.

       “மெடிக்கல் காலேஜ் படிச்சி டாக்டர் என்னதான் ஊசி மருந்து கொடுத்தாலும் நோய் குணமாவதில்லை அதே மெடிக்கல் படிக்காத கைராசி நாட்டு மருத்துவர் பச்சிலை பச்சை மண் கரைத்து கொடுத்தாலும். நோய் குணமாகிறது இதனால்தான் என் மகனை இந்த வருஷம் இன்ஜினிரிங் படிப்பில் சேர்த்துள்ளேன்”5 என்று கூறினார்5. விஞ்ஞானம் பெருகிவரும் காலத்தில் அலோபதி மருத்துவத்திற்கு இடம் தருவதற்கு மறுகின்றனர். அவர்கள் பழகிப்போன மருத்துவத்திலே மூழ்கியுள்ளனர். நாட்டுப்புற மக்கள் எந்த வழியில் செல்கிறார்களோ ! அந்த வழியிலே நாமும் செல்லவேண்டிய சூழ்நிலையில் இருப்பதைக் காணமுடிகிறது. பாதைகளை, சாலைகளை ஒழுங்குப்படுத்தலாம். ஆனால் நம்பிக்கையில் உள்ள மக்களை சீர் திருத்தும்போது முயற்சிகள் அனைத்தும் திரும்பி வரும் அம்புகளே ஆகும்.

 

நாட்டுமருத்துவர்:-

       பாட்டன், முப்பாட்டன் என்று பரம்பரை பரம்பரையாகநாட்டு வைத்தியம் செய்து வருகின்றனர். ஐந்து ஆறு தலைமுறையாக மருத்துவத் தொழிலைச் செய்து வருகின்றனர். பச்சிலை, வேர், பட்டை பொடி, கசாயம், லேகியம் என்னும் மருத்துவப் பொருளில் தயாரித்து கொடுக்கின்றனர். நெடுங்கல் வட்டாரத்தில் வேலுசாமி என்பவர் நான்கு ஐந்து தலைமுறையாக மக்களுக்கு மருத்துவம் செய்து வருகின்றனர் எங்க பாட்டன்முப்பாட்டன் முதல் நான் என்னுடைய மகன் பேரன் என்று இந்த நாட்டு மருத்துவத்தை செய்து வருகிறோம்6. என்று கூறுகிறார்.

மருத்துவச்செலவு:-

       நாட்டுப்புறத்தில் மருதுவச்செலவு என்பது குறைவாகவே காணப்படுகிறது. பழங்காலத்தில் விளைந்த பண்டங்கள் ராகி கம்புநெல் பழங்கள் காய்கறிகள் துணி கோழி போன்றவைகள் கொடுத்து வந்தனர். தற்காலத்தில் பணம் கொடுக்கப்படுகிறது. குழந்தை பிறந்துவிட்டால் பொன் ஆபரணம் பரிசாக வழங்கினார். நெடுங்கல் ஊர் தலைவர் ராமசாமி குடும்பத்தில் பிள்ளை பாக்கியம் இல்லாதபோது கிருஷ்ணகிரி கண்மணி சாமியாரிடம் சென்று ஜெபம் செய்த மருந்தை சாப்பிட்டதின் காரணமாக ராமசாமிக்கு குழந்தை பிறந்தது இதனால் கண்மணிக்கு இரண்டு பவுன் செயின்போட்டார்கள் என்று கள ஆய்வில் தெரிந்தது. தலைவலி பல்வலி வயிற்ற்று வலிபாம்புகடி தேள்கடிகளுக்குப் பணம் வாங்குவதில்லை. அவர்களின் கால்களைத் தொட்டு வனங்கி சாப்பிட்டாளே பொது அவர்களின் கால்களைத் தொட்டு வணகும் பொது” ஓம் குருவே துணை என்று முப்பாட்டனார் பாட்டனார் வரிசையில் மந்திரம் சொல்லி முடிக்கின்றனர்8. அதன்பின்னர் பெண்கள் அவர்களின் கால்களைத் தொட்டு வணங்குகின்றனர்.

 

சாப்பிடும்முறை:-

       நாட்டுப்புற மருத்துவம் சாப்பிடுவதற்குச் சில விதிமுறை காணப்படுகிறது காலை உணவுக்கு முன்னர் அல்லது உணவுக்கு  பின்னர்  காலை மாலை இரவு நண்பகல் என்று நேரம் குறித்து தருவர் நோயளிகளும் மருத்துவம் சொல்லும் நேரத்தைக் கடைபிடித்து வருகின்றனர்.

 

பத்தியம்முறை:-

       நாட்டுப்புற மருத்துவம் சாப்பிடுவதற்குச் சில பத்தியம் முறை காணப்படுகிறது அதாவது மருந்து சாப்பிடும்போது “புளி, மாமிசம் காரம் சாப்பிடகூடாது9 என்று கட்டுப்பாடு விதிமுறைகளைக் காணமுடிகிறது.

 

அளவுமுறை:-

நாட்டுப்புற மருத்தில் நாள் வாரம் மாதம் வருடம்என்று கணக்கு காணப்படுகிறது. “நாற்பத்து எட்டு நாள் சாப்பிட்டால் ஒரு மண்டலம்10 “என்று அளவு கூறுகின்றனர். நாற்பத்து எட்டு நாளில் குணமாகும் அல்லது இரண்டு மண்டலம் சாப்பிடவேண்டும் என்று கூறுகின்றனர். கொடுக்கும் மருந்துகளின் அளவுதுவரம்பருப்பு அளவுஎன்று கூறுவர்.

முடிவுரை:-

       இதுகாறும் மேற்கூறப்பட்டவைகள் அனைத்தும் கிருட்டிணகிரி மாவட்ட நெடுங்கல் ஊரில் நாட்டுப்புற மருத்துவர்கள் மக்களுக்கு மருத்துவம் செய்துவரும் வழிமுறைகள் என்பதை அறியமுடிகிறது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்