Ticker

6/recent/ticker-posts

நாட்டுப்புற மந்திரமும் சமய மருத்துவம்



நாட்டுப்புற மந்திரமும் சமய மருத்துவம்

மந்திரம் என்பது சமயத்திற்குச் சமயம் வேறுபடும். மந்திரத்தின் மூலம் ஒரு மனிதனை கெட்டவனாகவும்ää நல்லவனாகவும் மாற்ற முடியும் என்பது ஒவ்வொரு சமய மக்களின் நம்பிக்கை ஆகும். இவற்றின் மூலம் நெடுங்கல் மாவட்ட மக்களின் மந்திர நம்பிக்கைகளை நாம் இவ்வியலில் காண்போம்.

மந்திரம்:

மக்களசிலர் தம்முடைய சக்தியை அடிப்படையாகக் கொண்டு தமக்குப் புறம்பாக உள்ள இயற்கையிலும் அச்சக்திகளைக் கண்டு உபயோகித்து அடக்கக் கண்ட கருவியே மந்திரம் ஆகும்.

“புறத்தவர்களுக்குப் புலனாகாமல் மறைந்த சொற்றொடரெல்லாம் மந்திரம்” எனப்படும.1

மந்திரத்தை சிவசுப்பிரமணியன் இரண்டு வகையாகப் பாகுபாடு செய்கிறார்.

1. தூய மந்திரம்

2. தீய மந்திரம் 2

தூய மந்திரம்:

மந்திர சொற்கள் ஒரு மனிதன் நலனுக்கோ ஒரு குழு அல்லது சமுதாய மக்களின் நலனுக்கோ பயன்படுமானால் அவை தூய மந்திரம் எனப்படும்.




தீய மந்திரம்:  

ஏவல்ää பில்லிää சூனியம் போன்றவைகள்  தீய மந்திரத்தில் அமையும். கெட்ட ஆவி (அ) பேயினை ஒரு குறிப்பிட்ட மனிதனுக்கு எதிராக ஏவி விடுவதால் ஒருவனை நோய்வாய்ப்படும்படி செய்தல் ஆகியவை தீய மந்திரங்கள் ஆகும்.

மந்திரம் பற்றிக் குறிப்பிடும் “பிரேசர்”.  அதனை இரு வகைப்படுத்தியுள்ளார்கள்.

1. பாவனை மந்திரம் (அ) ஒத்த மந்திரம்

2. தொத்து மந்திரம்

மந்திர சடங்குகள்:

சங்க காலத்தில் இனக்குழு மக்களின் வாழ்க்கை பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. இனக்குழு மக்கள் வேளாண்மைத் தொழில் வேட்டையாடுதல்ää கால்நடை வளர்ப்பு ஆகிய தொழில்களை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தனர். இவர்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் உடலில் ஏற்படும் நோயைக் குணப்படுத்தவும் மந்திர சடங்குகள் செய்து வந்தனர். 

கூட்டாகச் செயல்பட்ட சடங்குகள் பின்னர் அக்குழுத் தலைவர்களால் செய்யப்பட்டன. மந்திரச் சடங்குகளை நடத்தும் தலைவன் மந்திரவாதி என்று பெயர் பெற்றான். இனக்குழு மக்களின் சடங்கு முறைகளை மானுடவியலாளர் கீழ்க்கண்ட மூன்று வகைகளில் பிரிக்கின்றார் என குணசேகரன் கூறுகிறார்.

1. மந்திரச் சடங்குகள்

2. மதச் சடங்குகள்

3. மந்திரமும் சமயமும் கலந்த சடங்குகள்2

“மக்கள் இயற்கைக்கு அந்தந்த சூழ்நிலையில் அதன் இயக்கத்தை நன்கு புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் தாங்கள் வகுத்துக் கொண்ட வழியே மந்திரச் சடங்காகும்” என சுப்பிரமணியம் குறிப்பிடுகிறார் 3.

மந்திரித்தல்:

மனித உடம்பில் தோன்றும் நோய்களுக்கு மந்திரம் சொல்லி பாடம் அடிப்பதாலும்ää இறக்கடித்தாலும் நோய் பூரண குணமாகும் என்று மக்கள் நம்புகின்றனர். ஒரு சொல்லையே திரும்பி திரும்பி உச்சரித்துக் கொண்டிருப்பதால் அது ஆற்றல் பெற்று வழக்காகிவிடும் என்பதால் அந்தச் சொல்லையே அவர்கள் உச்சரிப்பார்கள்.  பெரும்பாலும் கோவில் பூசாரிகள் அல்லது மந்திரவாதிகளே  மந்திரத்தை சொல்லுகின்றனர். மந்திரச் சொற்களை                   வாய்க்குள்ளேயே முனுமுனுத்துக் கொண்டு மந்திரத்திலே மந்திரித்தல் எனப்படுகிறது.

திருநீறு போடுதல்:

திருநீறு மந்திரித்து கட்டுவதால் சில பலன்களைப் பெற முடிவதோடு நோய் நீங்கும் என்பது மக்களிடையே காணப்படும் நம்பிக்கை. பயந்த கோளாறுää காத்து குணம் மற்றும் குழந்தைகள் அழுந்து கொண்டே இருந்தால் அல்லது காய்ச்சல் ஏற்படுதல் போன்றவற்றிற்குத் திருநீறு மந்திரித்துப் போடுவதால் நோய் பயம் குணமாகும் என்று நாட்டுப்புற மக்கள் நம்புகின்றனர்.

அக்கி எழுதுதல்:

அக்கி என்பது ஒரு வெப்ப நோய். அதாவது வெப்பம் மிகுதியால் உருவாவதாகும். அக்கிää பெரிய அக்கி என்றும் சிறிய அக்கி என்றும் இரண்டு வகைப்படும். பெரிய அக்கி என்பது சிறுசிறு கொப்புளங்களாகத் தோன்றும். சிறிய அக்கி என்பது வேர்க்குரு போலத் தோன்றும். அக்கி நோய் வந்தால் உடலில் அக்கி படர்ந்துள்ள இடம் எரிச்சலை உண்டாக்கி சிவந்து காணப்படும். இது பெரும்பாலும் முதுகிலும்ää கீழ்ச்சிலும் (அக்கில்) தான் அதிகமாக வரும். 

அக்கி நோய்ப் பற்றி சிவசுப்பிரமணியம் கூறும்போது அக்கி என்ற நோய் ஏற்பட்ட பகுதி நன்றாக சிவந்து சிறு சிறு கொப்பளங்களாக தோன்றி நோய் கண்ட இடத்தில் அரிப்பும் எரிச்சல் உணர்வும் ஏற்படும். இதன் காரணமாகவோ தானோ என்னவோ தீ வெப்பம் என்று பொருளைத் தரும் அக்கி என்ற பெயரே இந்நோய்க்குப் பெயரிடப்பட்டுள்ளார்கள். மந்திர வைத்திய முறையில் இந்நோய்க்கு அழிக்கும் சிகிச்சையினை அக்கி எழுதுதல் என்பார்கள். அக்கி எழுதுதலை பெரும்பாலும் குயவர்களே செய்;வார்கள்.

“இ;ச்சிகிச்சை முறையில் செங்காலிக் குழம்பினை அக்கி வந்த இடத்தில் தடவி அதன் மேல் சிங்கம் அல்லது நாயின் உருவத்தை தீட்டுவார்கள். சிங்கம் உருவம் பதிந்த பழைய காலத்து அரையண நாணயத்தை அக்கிப் புண்ணின் மீது பதிப்பர்” என்று குறிப்பிடுகின்றார்.5

பல நேர்த்திக் கடன்களை வேண்டுதல்களின் மூலம் நிறைவேற்றி அதனால் பல நோய்களிலிருந்து குணமாகுவதாகவும்ää நாட்டுப்புற மக்கள் நம்புகின்றனர்.

கண்மலர் சாத்துதல்:

கால்ää கைää கண் வலித்தால் அம்மனுக்குக் கால்ää கைää கண் சாத்துவதாக வேண்டிக் கொண்டு அவ்வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றார்கள். கண் மலர் சாத்துகிறார்கள். இதனால் அவர்கள் குணமாவதாகவும்ää நோய்களின் தீவிரம் குறையும் என்றும் நம்புகின்றனர்.

மாவிளக்குப் போடுதல்:

மாவிளக்குப் போடுவதினால் தலைவலிää நெஞ்சு வலிää கண் வலி ஆகியவை நீங்கும் என்று மக்கள் நம்புகின்றனர். வயிற்று வலி வந்தவர்களும் முறையே வயிற்றின் மேலும் தலையின் மேலும் நெஞ்சின் மேலும் கண்களின் மேலும் மாவிளக்கும் போட்டுக் கொள்வது பழக்கம் ஆகும். இப்பழக்கமானது நோயின் தீவிரம் குறையவும் தாக்காமல் இருக்கவும் செய்யப்படும் நேர்த்தி கடன்களாகும்.


கயிறு மந்திரித்தல்;:

கோவில் பூசாரிகளிடமோää கோடாங்கிளிடமோ அல்லது மந்திரவாதியிடமோ சென்று கயிறு மந்திரித்த கட்டிக் கொள்கின்றனர். நாட்டுப்புற மக்கள் கயிறு மந்திரித்துக் கட்டிப்கொல்வதால் இரவில் பயம் இல்லாமல் வெளியில் நடமாடலாம் என்று பயத்தினால் காய்ச்சல் ஏற்படாது என்றும் பூசை செய்து கந்தசஷ்டி கவசம் வாசித்து சாம்பிராணிப் புகையில் கயிறைக் காட்டியபின் மந்திரவாதியிடம் காணிக்கைச் செலுத்தி கயிற்றை வாங்கும்போது மந்திரவாதியின் காலில் விழுந்து வணங்கி விடடு கையிலோ அல்லது காலிலோ கட்டிக் கொள்வர்.நெடுங்கல் ஊரில் வேலுசாமி பூசாரியிடம் கயிறு கட்டிக்கொண்டால் பேய் பிசாசு பில்லி சூனியம் நோய் நொடி அண்டாது6.

வேண்டுதல்களை நிறைவேற்றல்;:

வேண்டுதல்களை நிறைவேற்றுவதன் மூலம் நோயில் இருந்து பாதுகாக்கப் படுவதாகவும்ää நோயின் தீவிரத்தை குறைக்க முடியும் என்றும் மக்கள் நம்புகின்றனர்.

எந்திரம் மந்திரித்துக் கட்டுதல்;:

மந்திரவாதி எந்திர தகட்டில் ஆண்டவன் சக்கரம் நூற்றி எட்டு மந்திரச் சொற்களை அதில் எழுதி சுருட்டி வெள்ளை நூலில் மஞ்சள் தடவி சாம்பிராணிப்புயைக் காட்டியபின் சாணத்தால் பிள்ளையார் செய்து கட்டிவிடுவர். எந்திரம் கட்டுவதால் தீய ஆவிகள் மக்களை அண்டாது என்று மக்கள் அதிகமாக நம்புகின்றனர். எந்திம் பற்றி “சோமலே” குறிப்பிடுகையில்

“நோய்களைக் குணப்படுத்த மந்திரங்கள் உபயோகிக்கும் பழக்கம் தமிழ்;நாட்ல் பரவியிருக்கிறது. இதனால் தீமையிலிருந்து தாயத்து அணிந்தவனைக் காப்பாற்றும் ஆற்றலையும் அவனுக்கு உடல் நலத்தையும் செல்வத்தையும் வழங்கும் சக்தியையும் அந்த தாயத்து பெற்று விடுவதாக கருதப்படுகிறது”  என்று கூறுகிறார்.

எந்திரம் கட்டியவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தண்ணீர் ஊற்ற மாட்டார்கள். எந்திரத்தை அவிழ்த்து கீழே வைக்கமாட்டார்கள். இறந்தோர் வீட்டிற்குச் செல்ல நேர்ந்தால் எந்திரத்தை கழற்றி பூசை அறையில் வைத்துவிட்டு சென்று வந்து மீண்டும் சாம்பிராணிப் புகை காட்டி கோமியம் தெளித்து பூசை செய்து எடுத்துக் கட்டிக் கொள்வார்கள். இதற்காக ஏழு நாட்கள் முதல் பதினொரு நாட்கள் வரை விரதம் முறையை மேற்கொள்வார்கள். தினந்தோறும் இரண்டு வேளை குளித்துவிட்டு எந்திரத்தை பூசை செய்வார்கள். எந்த விதமான அசைவ உணவுகளையும் உட்கொள்ள மாட்டார்கள்.

உப்பு மந்திரம்:

முருங்கைக் கீரையையும்ää உப்பையும் எடுத்து அரைத்து வெந்நீரில் கலந்து மந்திரித்துக் கொடுத்தலே உப்பு மந்திரித்தல் ஆகும். இவை புளியேற்றம் எடுத்தல்ää வயிறு பசியாகாமல் மந்தமாக இருந்தால் உப்பு மந்திரித்து சாப்பிட்டால் புளியேப்பம் நீங்கி பசியெடுக்கும் என்பது நம்பிக்கை. இம்மாதிரியின் நோயினை முருங்கைக் கீரை நீக்கிவிடும் என்பது கிருட்டிணகிரி மாவட்ட மக்களின் நம்பிக்கை.உப்புஇ மிளகாய் மூன்று வீடுகளில் கூரை இவற்றினைக் கலந்து நாய் நரி பேய் ஊரார் கண்கள் என்று வரிசையாகக் கூறி திருஷ்டி கழிப்பார்கள்.

கண்ணேறு கழித்தல்:

கிராமப்புறங்களின் ஒவ்வொரு குடும்பத்தில் இரவு ஏழு மணியளவில் வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் முச்சந்தி கூடும் இடத்தில் காலடி மண்ணெடுத்து வந்து எவருக்குக் கண்ணேறு பட்டிருக்கின்றதோ அவர் சாப்பிட்ட எச்சத் தண்ணியல் காய்ந்த மிளகாய்ää உப்புää கடுகுää கூரை ஓலைää துடைப்பம் ஆகியவற்றைச் சேர்த்து இடதுபுறம் மூன்று முறை வலதுபுறம் மூன்று முறை தலையைச்சுற்றி நாய் கண்ணுää பேய் கண்ணுää பிசாசு கண்ணுää கொள்ளி கண்ணுää எல்லா கண்ணும் அவிஞ்சி போக என் கண் நல்லா இருக்க என்று நெட்டை எடுத்து அதனை காரிதுப்பி அடுப்பில் போடுவார்கள். சாப்பிட்ட தட்டில் உள்ள தண்ணீரில் சுண்ணாம்புää மஞ்சள் இரண்டையும் கலந்து ஆழம் எடுத்து வீட்டிற்கு அழைப்பார்கள்.

ஓலை எழுதுதல்:

குழந்தைகளுக்குப் பலகிரகதோசம் ஏற்பட்டால் அதற்கு ஒரு ஓலை எழுதி கட்டினால்ää உடனே குணமாகும் என்ற நம்பிக்கை பெருமளவில் காணப்படுகிறது. பலகிரக தோசத்தை அறிந்து ஏடு எழுதிகட்டும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. ஏடு எழுதும்போதே குழந்தைகளுக்குக் குணமாவது நம்மால் அறிய முடியும் என்று நம்பப்படுகிறது. இதற்கு ஏடு எழுதுவோரிடம் சென்று எழுதி வர வேண்டும் என்பது கிராமப்புற மக்களின் நம்பிக்கையாகும்.

செய்ய வேண்டிய சடங்குகள்:

வீட்டில் ஓரிடத்தில் தரையைச் சானத்தால் வழித்து பின்பு சானியைப் பிள்ளையார் செய்து வைத்து அதற்கு ப10ப்போட்டு பின்பு அருகம்புல் நடுவில் சொருகி சாம்பிராணி போட வேண்டும். போட்ட பின் இறைவனை நினைத்து தொட்டில் அடியில் சாம்பிராணி காட்ட வேண்டும். ஓலையைக் கையில் கட்டிவிட வேண்டும். ஆண் பிள்ளையாக இருந்தால் வலதுபக்கமும்ää பெண் பிள்ளையாக இருந்தால் இடது பக்கமும் கட்ட வேண்டும். இதனை ஏட்டு குணம் என்பார்கள்.

அம்மை நோய்:

அம்மை நோய் மாரியம்மன் சினத்தின் காரணமாக தோன்றுகின்றது என்று மக்கள் நம்புகின்றனர். இதற்கு வீட்டினை நன்கு சானத்தால் வழித்து சுத்தமான இடத்தில் வேப்பிலைணை அதன் மேல் அம்மை நோய் வந்தவர்களை படுக்க வைப்பர். கழுத்தில் ஒரு துணியில் மஞ்சள் தடவி கழுத்தில் கட்டுவர். இளநீர்ää மோர்ää மொந்தை வாழைப்பழம்ää குளிர்ச்சியான பொருட்களை கொடுப்பார்கள். மீன் போன்ற அசைவ உணவுகளை கொடுப்பார்கள். உப்புää காரம் எதையும் சேர்த்து கொள்ள மாட்டார்கள். வேப்பிலை மஞ்சள் சேர்த்து அரைத்து மூன்றாம் நாள்ää ஐந்தாம் நாளன்று கணக்கு வைத்து சூரிய ஒளியில் தண்ணிரை ஒரு பாத்திரத்தை வைத்து வேப்பிலை போட்டு மூடி வைப்பர்;. அந்தத் தண்ணீரை அம்மை வந்தவர்களுக்கு ஊற்றுவர். உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் கால் கழுவிவிட்டு தான் வீட்டிற்குள் நுழைய வேண்டும்.

வழிபடும் முறை:

நெடுங்கல் வட்டார மக்களின் கூற்று:

அம்மா மாரி தாயே! என் வீட்டில் வந்து விளையாடுவது போல எல்லார் வீட்டிலும் போய் விளையாட வேண்டும் என்று வேண்டி உடல் முழுவதும் வேப்பிலையை அணிந்து கோவிலை வளம் வந்து வேண்டுதலை நிறைவேற்றுவர்.

சாங்கியம் பார்த்தல்:

மனிதனுக்கு ஏற்படும் நோய் அல்லது விபத்துகளுக்கு விலங்கு அல்லது மற்ற சகுணத்தால் ஏற்படும் இன்னல்கள் ஆகும். பொதுவாக பூனை குறுக்கே வந்தால் கெட்டது என்கிறோம். திருமணத்திற்குச் செல்லும் போது கணவனை இழந்த பெண்கள் அவர்களுக்குக்குறுக்கே வருவது கெட்ட சகுணம் என்கின்றனர். அவ்வாறு செல்லும்போது ஏதேனும் விபத்துக்கள் நேர்ந்தால் அதற்குக் காரணம் அவர்களே என இன்றளவும் நம்புகின்றனர்.

முரட்டு வைத்தியம்:

நாட்டுப்புற  மருத்துவ முறையில் முரட்டு மருத்துவமும் உண்டு. சில நோய்களை குணமாக்க முரட்டு மருத்துவம் செய்யப்படுகிறது. முரட்டு மருத்துவம் என்பது கட்டாயப்படுத்தியும் உடலை மிகவும் வருத்தியும் மேற்கொள்ளும் முறையாகும்.

நோய்கள்:

1. பேய் பிடித்தல்

2. இடுப்பு நெட்டை எடுத்தல்

3. பொன் அரளி விதையை தின்றல்

4. சூடு போடுதல்

பேய் பிடித்தல்:

நாட்டுப்புற மக்களிடையே கல்வியறிவில்லாத பெரும்பாலும் பெண்களையே பேய் பிடிக்கும் நிலைக்கு ஆட்படுகின்றனர். இவர்கள் மனஉறுதி இல்லாததனால் அச்சம் அதிர்ச்சியில் உடல் மாற்றம் உள்ளம் மாற்றம் அடைகின்றனர். உடல் நலக்கேட்டினால் உடல் நலம் தேய்கிறது. இதனால் பேய் பிடித்தல் நிலையை அடைகின்றனர்.

“பேய் பிடித்தல் என்பது தீய ஆவிகளால் மனிதன் பாதிக்கப்படுவதால் தன்னை மறந்து தானே சிரிப்பதாகவும்ää தானாகவே பேசிக்கொள்வதுää அழுவதுää ஆடுவதுää சத்தம் போடுதல்ää கொட்டாவி விடுதல் ää சோர்ந்து இருத்தல் போன்ற செயல்களை பேய்ப்பிடித்தவர்கள் செய்வார்கள8;. 

பேய் பிடித்தல் பற்றி நற்றினை அணங்கோடு நின்றது. மலை (165) என்றும் பதிற்றுப்பத்தது அணங்குடை முந்நீர் எழுவது என்றும்ää புறநானூறு பேய் மன்றம் (220) என்றும் கூறுகின்றனர். எனவே பேய்ப் பற்றி சுப்பிரமணியன் குறிப்பிடும்போது வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு சக்தி காரணமாகிறது எனக் கருதுகிறார். அச்சக்தியைப் பழந்தமிழர் அணங்கு சூர்ää பேய்ää கடவுள்ää தெய்வம் என்றனர்  என்று குறிப்பிடுகின்றனர்.




பேய் பிடிக்கக்கூடிய  நேரம்:

1. நண்பகல் நேரம் எண்ணெய் பலகாரங்கள் மற்றும் புலால் உணவை எடுத்துக் கொண்டு வரும்போதும்.

2. மல்லிகை பூச்சு10டி வரும் போதும்.

3. அந்தி நேரம் சீவி முடிந்து வரும் போதும்.

4. காலில் செருப்பு இல்லாமல் தனியே வரும் போதும்.

5. உடலில் இரும்பு இல்லாமல் தனியே வரும் போதும்.

இது போன்ற நேரங்களில் பேய் பிடிக்கும் என்பது கிராமப்புற மக்களின் நம்பிக்கை. பொதுவாக செருப்புää இரும்புää துடைப்பம் இவை போன்றவை இருந்தால் பேய் வரது என்பது மக்களின் நம்பிக்கை.பேய் பிடிக்காமல் இருக்க குழந்தைகளுக்குப் பெரியவர்கள்ää

1. உடலில் இரும்பு இருந்தால் பேய் அண்டாது.

2. வீட்டின் நிலைப்படியில் ஆணி அடித்திருந்தால் பேய் வீட்டிற்குள் வராது.

3. குழந்தை தொட்டிலில் உறங்கும் போது அதற்கு கீழ் துடைப்பம்ää செருப்பு போன்றவற்றை வைத்திருந்தால் பேய் வராது.

4. மந்திரத் தகடுகள் வீட்டின் நான்கு பக்கமும் வைத்திருந்தால் வராது.

5. இருட்டு வேளையில் தனியே செல்லும் போது கடவுள் பெயரை உச்சரிக்க வேண்டும். பெருவிரலை ஊன்றி நடந்தால் பேய் பிடிக்காது. திருநீறு அணிந்து செல்ல வேண்டும்.

6. மந்திரித்த நீர்ää குதிரை லாடம்ää திறந்து வைத்திருக்கும் குடிநீர்ää வீட்டிற்கு முன்பு செருப்புää வீ;ட்டைச் சுற்றி பசுவின் கோமியம் தெளித்தால் பேய் வராது.


பேய் தங்கும் இடங்கள்:

சுடுகாடுääபுளியமரம்ää முருங்கை மரம்ää அத்திமரம்ääஆலமரம்ää இருவாச்சிää பனைமரம் ஆகியவற்றில் பேய் தங்கும்.

முட்காடுää கற்றாழைக்காடுää பாழும் கிணறுää குட்டிச்சுவறுää ஆள் நடமாட்டம் இல்லா ஊருக்கு ஒதுங்கிய இடம்ää பாழடைந்த வீடுகள் போன்ற இடங்களி; பேய் தங்குமிடமாக கருதப்படுகிறது.

பேய் ஓட்டும் முறை:

கிராமப்புறங்களில் பேய் பிடித்தோரை மந்திரவாதிகள் மந்திர சடங்குகள் செய்து பேயை ஓட்டுகின்றனர். பூசாரி சில மந்திரங்களை முணுமுணுத்து திருநீரை தலையிட்டு நான்கு திசைகளிலும் எலுமிச்சை பழத்தையும் திருநீரையும் வீசி ஓடிப்போ என்கிறார்.

வேப்பிலை எலுமிச்சை அருவாளாளல் சுத்தப்பட்ட பந்தம் தண்ணீர் ஒரு சொம்பு ஆகியவற்றை வைத்து முதலில் சாமி வரவழைப்பார்கள். பின்பு சாமி வந்து நீ யார்.?உன் பெயர் என்ன.?உனக்கு என்ன வேண்டும.; நீ எந்த ஊர்.? எதற்கு இந்த சின்னஞ்சிறுவனை பிடித்திருக்கிறாய?; எப்படி இருக்கிறாய் போன்ற கேள்விகளைக் கேட்பார்கள். அதற்கு அந்தப் பேயும் பதில் கூறுமாம். பின்பு அப்பேய் என்னென்ன கேட்கிறதோ.! அவை அனைத்தையும் கொடுப்பார்கள். மதுää புகையிலைää உணவு வகைகள் போன்றவற்றை அதற்குப்படைப்பார்கள். சாப்பிட்டதும் அதனின் உச்சந்தலையில் உள்ள முடியைப் பிடித்து முடிப் போட்டு பின்பு பந்தம் கொளுத்தி அதனை ஓட்டுவார்கள். பின்பு ஊர் எல்லையில் தாண்டி ஒரு பனைமரம் அல்லது புளிய மரத்தில் கட்டப்பட்ட முடியினை அறுத்து அதனைஓர் ஆணியில் வைத்து அடித்து விடுவார்கள். பின்பு அனைவரும்  திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு வந்து காலை கழுவி விட்டு வருவார்கள்.



“ சித்துடக்கே சிறு பிரம்பு

மண்ணுடக்கே மணிப்பிரம்பு

கொத்தோட வாழப .....

கொலை கொலையாத தேங்காய்”.

பேயோட்டல் என்பது பெண்ணின் உடலைத் தழுவியுள்ள ஆவியை அது விரும்பும் சில பொருட்களை ஊடகமாகக் கொண்டு மரம் போன்ற இன்னொரு பொருளுக்கு மாற்றுவதாகும். ஆவியை ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு மாற்றலாம் எனலாம் என்ற நம்பிக்கை இனக்குழு சமூக வளர்ச்சி நிலையின் ஒரு கட்டத்தின் பிறந்தது இந்நம்பிக்கை. இன்றைய நாட்டுப்புற நம்பிக்கை சமூக அமைப்பிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.21

இடுப்பு நெட்டை எடுத்தல்:

எதிர்பாராமல் திடிரென்று திரும்புவதாலும் கீழே விழுவதாலும்ää சுமை தூக்கும் போதும் இடுப்பு பிடித்து விடுகிறது. இதனால் எங்கும் நகர இயலாமல் நரம்பு புரண்டுவிடுவதால் இடுப்பில் நெட்டை எடுப்பர்.

இடுப்பு நெட்;டை எடுப்பதற்கு எந்த சடங்கும் செய்வதில்லை. இடுப்பு பிடித்தோரை மல்லாக்க படுக்க செய்வர். இருவர் இரண்டு பக்கமும் தலையைப் பிடித்துக் கொண்டு கால்களைப் பிடித்துக் கொள்வர். படுக்கும் போது ஒரு பக்கமாகவோää குப்புறமாகவோää படுக்க வைப்பதில்லை. வைத்தியர் இடுப்பு பிடித்த ஒடத்தில் காலை வைத்து மெதுவாக அசைப்பர். அவ்வாறு அசைத்துக் கொண்டே திடிரென்று உதைப்பர். அப்பொழுது நெட்டைகள் தோன்றும். வைத்தியர் இடுப்பில் கால் வைத்து அசைக்கும் போது தலையையோää காலையோ அசைக்காமல் இடுப்பை மட்டும் உதைத்து நெட்டை எடுப்பதால் இதனை இடுப்பில் நெட்டை எடுத்தல் என்கிறார்கள்.


நரம்பு சுளுக்கு:

உடல். கழுத்துää கைää கால்ää தோல் ஆகிய இடங்களில் நரம்பு சுளுக்கு ஏற்பட்டால் வலி அதிகமாகிவிடும். இவ்வலியை நீக்க உலக்கையினை வைத்து சுளுக்கினைப் போக்குவர்.

எந்தப் பக்கம் சுளுக்கு ஏற்பட்டுள்ளதோ பாதங்களின்  முழியில் உலக்கை வைப்பார்கள். நரம்பு சுளுக்கு உள்ளவர்களுக்கு பாதங்களில் விளக்கெண்ணெயைத தடவியவுடன் உலக்கையை எடுத்து முழியில் வைப்பார்கள். உலக்கை வைத்தவுடன் தாங்க முடியாத வலி உண்டாகும். ஒரு சிலர் சத்தமாக கத்திக்கொண்டே எழுந்து ஓடி விடுவார்கள். உலக்கையை வைக்கும் போது பெருவிரலிலும்ää ஆள்காட்டி விரல் நுனியில் உலக்கை விழாமல் இருப்பதற்காக பிடித்திருப்பார்கள். உலக்கையில் பதிந்துள்ள வளையத்தின் விளிம்பு பாதங்களின் முழியில் நன்கு பதியும். மூன்று முறை உலக்கையைச் சிறுது நேரம் வைத்து எடுப்பர். கால்களை உதறி விடுவார்கள். இவ்வாறாக மூன்று நாட்கள் உலக்கை வைப்பார்கள். முதல் முறையிலேயே நரம்பு சுளுக்கு சரியாகி விட்டால் பிறகு உலக்கை வைக்க மாட்டார்கள். எண்ணெய் போட்டு நீவி விடுவார்கள்.

பொன்னரளி விதையைத் திண்றல்:

கிராமப்புறங்களில் தற்கொலை செய்துக் கொள்ள ஒரு சிலர் பொன்னரளி விதையை அரைத்துக்  குடித்துவிடுவார்கள். இதை கவனிக்காமல் விட்டு விட்டால் சிறிது நேரத்தில் பொன்னரளி விதை உயிரைக் குடித்து விடும். பொன்னரளி விதையை உட்கொண்டவரை முதலில் நாயின் மலத்தை தேடி எடுத்து அவரது வாயை திறந்து நாயின் மலம் மற்றும் சோப்பு தண்ணீர் இரண்டையும் கரைத்து ஊற்றினால் பிழைத்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுமாம்.

பின்னர் தேங்காய் எண்ணெய்ää கோழி சிட்டை ஆகியவற்றை கலக்கி வாந்தி எடுக்க வைத்து பின்பு அவரது தலைமுடியினை வாயின் வழியாக தொண்டை வரையிலும் விடுவார்கள். அவ்வாறு விடும்போது வயிற்றில் இருக்கும் கொட்டைவெளியேறும். மீண்டும் எந்த விதமான தொந்தரவும் இருக்காது.


சூடு போடுதல்:

கிராமப்புறங்களில் பேய் பிடித்தல்ää ஜன்னி வந்தால் சூடு போடுவார்கள். நெஞ்சு வலி வந்தாலும்ää மூச்சுத் திணறல் ஏற்பட்டாலும் கூடு போடுவார்கள். சூட்டுக் கோலை அடுப்பில் வைத்துக் காய வைத்து பிறகு காலில் போடுவார்கள். நெஞ்சு வலிக்கு வலியுள்ள இடத்;தில் மூன்று கோடுகள் போடுவார்கள். “ பாம்பு விஷம்” இறங்கா விட்டால் ஓட்டில் தீயைப் போட்டுத் தலையில் வைத்து பாடம் போடுவார்கள்.

சூனியம் வைத்தல்:

சூனியம் வைத்தல் என்று கூறுங்கால் அது அல்லன வகைப்பட்ட மந்திர வித்தைகளுக்குள் அடங்கும் சூனியம் வைத்தல் மூலம் தங்கள் பகையைத் தீர்த்துக் கொள்கின்றனர். பகைமை உடையவர் அறிய வேண்டும் என்ற நோக்குடன் செயல்படுகின்றனர். இதனால் பில்லி சூனியம் வைக்கப்பட்டவர்கள் நல்லவர்களாக இருப்பினும் நோய்வாய் படுகிறார்கள். அவர்கள் வழிபடும் தெய்வம் சக்தியுடையதாய் இருப்பின் அவர்களை நோய்களிலிருந்து மீட்டு பில்லி சூனியம் இவற்றிற்குச்  சக்தியில்லாமல் செய்து விடும். இதற்கான காரணமானவர்களை அழிந்து போகும் நிலையும் ஏற்படுவதுண்டு.

இதுவாறு மேலே கூறப்பட்ட ஆய்வுகள் கிருட்டிணகிரி மாவட்ட நெடுங்கல் ஊரில் நாட்டுப்புற மக்கள் தம் வாழ்வில் கடைபிடித்துவறும்  மந்திரங்களும் மருத்துவ முறை சடங்குகள் என்பதினை அறிய முடிகிறது. ஏடு அறிய எழுத்து அறியா நாட்டுப்புற மக்கள் மரபு வழியாக இம்முறைகளைக் கடைபிடித்து வருவதனை ஆய்வில் கண்டறிய முடிந்தது 

கருத்துரையிடுக

0 கருத்துகள்